சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 69
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 69
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் தலத்தின் நாகசுனையின் சிறப்பு :-
●●●●●●●●●●●●●●●●●●●
நாகசுனையில் தீர்த்தமாட
நினைத்தவரைக் கண்டால்
எமனும் பயந்தோடுவான்
எவரேனும் விளையாட்டாக
நாகசுனையில் நீராடியவரும்
நாதனை வேண்டி
நாமங்கல் சொல்லி
நீரடுவோர் பயணனை
விளையாட்டாக நீராடியவன்
வினைத் தீர
சிவலோகை அடைவர்
மார்கழி முதல்
மூண்று மாதம்
அதிகாலை மூழ்கி
அன்னம் குறைத்து
புன்னைவனத்தில் விரதமிருந்தால்
பாவம் நீங்கி
சாரூபபதவி அடைவர்
கார்த்திகை மாதத்தில்
கீரைகள் உண்ணாமல்
நாகசுனையில் அதிகாலை
நீராடிச் சங்கரலிங்கரை
வணங்கினால் வினைநீங்கி
தேவேந்திரப் பதவியடைவர்
ஆவணி ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை நாகசுனையில்
நீராடினால் வலிய
தீவினை நீங்கும்
தை மாதத்தில்
நீராடினால் எல்லாப்
பற்றும் நீங்கும்
வெள்ளிக்கிழமை ஆவுடையாள்
தலம் சென்று
மந்திரம் சொல்லி
மன்றாடிப் பின்
சங்கரரை வணங்கி
சிவபக்தார்களுக்குத் தானமிட்டால்
சிவலோகம் அடைவர்
திருவாதிரை நட்சத்திர
தினத்தில் நீராடினால்
இந்திரனாக இருப்பர்
தினந்தோறும் மூழ்கி
தெய்வ வழிபாடு
செய்தால் அரசனுக்கும்
அரசன் ஆவன்
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்