சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 68

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 68
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரகத்துவச பாண்டியன் பிள்ளைப் பேறு பெற்ற சங்கரன்கோவில் தலச் சிறப்பு :-

●●●●●●●●●●●●●●●●●●●
உக்கிரன்கோட்டையில் மாமறவர்
உக்கிரப் பாண்டியன்
ஆட்சி செய்கையில்
யானை சிவனை
சுற்றி வலம் வந்த
கரிவலம்வந்தநல்லூரினை மாமறவர்
பிரகத்துவச பாண்டியன்
ஆண்டு வந்தார்

பாண்டியனுக்கு அடுத்து
பார் ஆள்வதற்கு
வாரிசுயின்றி வரம்
வேண்டிப் பால்வண்ணநாதரை
மனதுருகி வேண்டிட

மனம் இறங்கிய
மகாதேவன் தோன்றி
மன்னா ! வேண்டிய
மகத்தான வரம்
மனைவியின் மடியில்
மழலை விளையாடும்

சங்கையில் சங்கரலிங்கராக
சக்தியுடன் உடன்
எழுந்தருளியத் தலத்தை
பெரியதலமாக எழுப்பி
என் குறைதீர்
உன் குறைதீரும் என்க

புன்னைவனம் வந்தான்
புலர்மைத்தான் ஆலயத்தை
பிள்ளை வரம்
வேண்டி வைத்தியநாதனிடம்
வேண்டுகோள் வைக்க
சங்கரலிங்கர் அருள் பெற்று
விஜயகுஞ்சுர பாண்டியனை
மகனாக பெற்றார்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (24-Sep-23, 8:41 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 9

மேலே