சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 67

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 67
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கன்மாடன் முக்தி பெற்ற சங்கரன்கோவில் தலச் சிறப்பு :-
பாகம் : 2
●●●●●●●●●●●●●●●●●●●
பாகம் : 1 சுருக்கம்
சேற்றூர் பக்கத்தில் ஓடும்
சிற்றாறுத் தேவியாற்றுக் கரையில்
சிவராத முனிவர் தவமிருக்க
சிவராதனின் புதல்வன் கன்மாடன்
சிற்றாற்றுக் கரையில் எதிர்வந்த

பசுவினை ஆழச் சேற்றினுள்
பசுவினைத் தள்ளிட மாண்டது
பிதவான சிவராதன் கன்மாடனின்
பயத்தில் சரீரம் பொழிவிழந்த

முகம்கண்டு நடந்தவற்றை மகனிடம்
முனிவர் கேட்டறிந்து பயம்கொண்டு
முறையற்றச் செய்தப் பாவத்தினை
முறிக்கும் பரிகாரம் தேடி...

பாகம் : 2

நான்கு வேதங்களையுனர்ந்தப் பிரர்மணர்
நால்வர் சபைக்கு வந்திட்ட
சிவராதன் நடந்திட்டதைக் கூற
சபையோர் பசுவின் கொலை

குற்றத்தில் பெருங்குற்றம் அக்குற்றத்திற்கு
குலத்தோர் இருபத்தொருபேர் நரகம்
அடைந்து அல்லல் படுவர்
அக்குற்றம் வராது அகல

சிவராதன் சிவபக்தன்னென்பதால் கன்மாடனிடம்
சேராதிருந்தால் பாவம் சேரதிருக்குமென
நால்வர் சபையோர் சொல்ல
நா நடுங்கிய சிவராதன்

கன்மாடனை நோக்கி மகனே !
காசிமுதலியப் புன்னியஸ்தலம் சென்று
தரிசனம் செய் அத்தரிசனத்தின்
தெய்வீக அருள் பெற்று

புன்னைவனம் நாகசுனை அடைந்து
பாவந்தீர்க்கும் நாகசுனையில் நீராடி
சங்கரலிங்கரை வழிபட்டால் பாவத்தை
சங்கரமூர்த்தி நீக்கிடக் கயிலாயமடைவாய் யென

பிதாச் சொல்படிப் புதல்வன் செய்திட
பசுவினைக் கொன்றப் பாவம் தீர்ந்து
சிவன் வாழும் சிவபுரத்திற்கு சென்றான்

கன்மாடனின்றி எவரேனும் விளையாட்டாக
நாகசுனையில் கால் பட்டாலும்
பாவம் முறிந்து சிவனடைவர் ....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Sep-23, 10:41 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 16

மேலே