எனை மறந்தனையோ

எனை மறந்தனையோ
××××××××××××××××××××
அந்திமாலை மஞ்சள் வெயிலாக
மனதுக்குள் இதமாக வந்தவளே
ஏனோ எனை மறந்தனையோ
சிவந்தக் கதிர்வீசும் கதிரவனாக
சுட்டெரித்து சென்றாயேக் காதலை..

அரும்பாத மல்லி மொட்டாக
விரும்பா திருந்தேன் காதலை
மல்லியை மலரவைத்தத் தென்றாலாக
மங்கையே மலரச்செய்தாய் காதலை
வாடச்செய்தாய் மறந்திடுயென ஒருசொல்லில்..

எழுதாத கவிதையை எழுதினேன்
ஏற்றாதத் தீபமாக கண்ணொளியில்
காதல் தீபம் ஏற்றியேத்
தூண்டாதத் தீபமாக அணைத்தாய்
விட்டில் பூச்சியாகத் தவிக்கிறேன்..

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Sep-23, 5:40 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 110

மேலே