கடலோரம் வீசும் காற்றே
கடலோரம் வீசும் காற்றே
××××××××××××××××××××××
சுருள் வலை விரித்து
பாரை மீனைப் பிடிப்பவனை
சேலை வலை வீசி
மாமனைப் பிடித்த கானாங்கெளுத்திமீனே
மீனா உலர்த்தி
மானா ஓடுறியே
தானா மறந்தேனே
தேனான நினைவுகளை
உப்புத் தடவிய
கெடாத மீனாக
மறக்காது வருகிறாயே
கனவில் நித்தம்
துன்பங்கள் ஆயிரத்தில்
இன்பம் நீதானடி
நடுக்கடல் தனிமையில்
சொந்தம் யுன் நினைவடியென
கடலோரம் வீசும்
காற்றே நில்லு
கரையில் தவமிருக்கும்
காதலியிடம் செல்லு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்