அதுபோல உண்டா
யானை இருந்தாலும்
இறந்தாலும்
ஆயிரம் பொன் என்பார்கள்
அதுபோல
அரசியலார் பதவியிலிருந்தாலும்,
இல்லாமலிருந்தாலும்
பொன்னுக்கு சமமென்று
புகழ்வார்கள்
காட்டில் வாழும் யானை
கலங்கமில்லாதது
தாய் யானை
தன் குட்டி போல்
பாரபட்சம் பார்க்காமல்
பிற குட்டி யானைகளுக்கும்
பால் தந்து காக்கும்
அகிலத்தில் அரசியலார்
அதுபோல உண்டா?