கருணை மழைபொழிவான் கடவுள்
கடல்நீர் கதிரவன் துணையால் கார்மேகமாய் மாறி
அடைமழையாய்ப் பொழியும் அவனியைக் காக்க
அந்த மழைநீரிலோ உப்பு கரிக்கவில்லையே
கடவுளிடம் அன்புநாம் செலுத்திட உப்பாம்
பாவங்கள் ஒழிந்து நம்மீது கலப்பிலா
கருணை மழைப் பொழிவான் அவன்.