காளிதாசனாய் மாறிடுவேன்

நீ சிரித்தாய் கன்னத்தில் குழி விழுந்தது
என் இதயத்தை சிறை பிடிக்க

நீ சிரித்த போது உன் கன்னங்கள் சிவக்க
அதைப் பார்த்தோ என்னமோ பாவம்

தடாகத்து தாமரையும் தலைகுனிந்தது
தன் செந்நிறம் சற்றே வெளிற

ஆடி வந்தாய்நீ கடாப மயிலாய் உன்
வெற்றிலைக் கொடி சிற்றிடை என்மனதில் படிய
அகத்தி மரத்தை தழுவிய வெற்றிலைக்கொடிபோல

நீ ஆடிவந்தாய் பின்னே உன்பாட்டு வந்தது
கூவும் சோலைக்குயில் பாட்டாய்
என் மனதில் இன்பம் சேர்த்து குளிரவைக்க

கன்னியே உனழகைக் கண்டு இப்படித்தான்
நான் மதி மயங்கி என்னையும் அறியாது கவியானேன்
இனி என்ன காளிதாசனாய் மாறிடுவேன்
நம் காதல் காவியம் பாட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Oct-23, 7:51 pm)
பார்வை : 51

மேலே