அழகின் அளவுகோல்

கருங்குழலே கார்மேகமாய்
முகம் மறைக்க கனவின்
தழுவலில் தனைமறந்த
ஆழ்ந்த நித்திரையில்
அழகோவியமாய்
உறங்குகிறாள்
தேவதைப்பெண்.....

நித்திரைவிலகிய
நிலவோவியம் - தன்
பாழும் மறதியை
மானசீகமாக நொந்து
விண்வெளிவிட்டு தவழ்ந்து
தரை யிரங்கினாள்
பூவுலகிற்கு.....

கனவில் சினுங்கிய
தேவதை நிதர்சனத்தில்
தன்கார் மேகம்விலக்க
வெண்பளிங்கு முகம்
சுடர்விட்டு கூசச்செய்தது
நிலவின் பாவையை....

பளிங்கு முகம்தனை
கண்ணார கண்ட
பால்வெளி மங்கை
இமைக்க மறந்து
ஸ்தம்பித்து நின்று
விட்டாள்.....

அழகின் அளவுகோல்
ஆச்சரியத்தில் ஆழ்ந்தது
பூலோக தேவதையை
கண்டு!!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (6-Oct-23, 10:15 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : azhakin alavugol
பார்வை : 143

மேலே