இறுதிப் பயணம் 2

வாழ்வில் ஒவ்வொரு
நெளிவு சுழிவிலும்
ஏற்ற இறக்கத்திலும்
நிழலாய் எந்தன்
பின்னோடு இராமல்
தோழியாக அருகில்
நீங்காமல் நின்று
வழிகாட்டியநீ......

இறுதிப் பயணத்தில்
மட்டுமெனை விடுத்து
தனியளாய் அடியெடுத்தால்
விடுவேனா நான்..??
உன்னருகில் நானும்
விலகாது கரம்பிடித்து
காட்டிடுவேன் வழி
இறுதிவரை.....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (6-Oct-23, 10:17 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 183

மேலே