வெள்ளி நிலா
நிலவே வெள்ளி நிலவே மண்ணிலிருந்து
உன்னைப் பார்க்கையிலே உன்னழகு கொள்ளைஅழகு
ஆனால் உன்னையடைந்த விண்கலத்திற்கேனோ
உன்னழகு காண முடியவில்லை அது
காண்பதெல்லாம் வெறும் கல்லும் மண்ணுமே
பால்நிலவே நீ எங்கு சென்று மறைந்தாயோ
என்று விண்கலம் கேட்க ......நீயோ இங்கு
எமக்கு இன்று பௌர்ணமி தண்ணொளியோடு
உன்னழகைக் காட்ட தவறலையே !