மகாத்மாவே நீ மீண்டும் வா
மகாத்மாவே நீ மீண்டும் வா
''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""
கெட்டதை பேசாதே!
கெட்டதை பார்க்காதே!
கெட்டதை கேளாதே!
காந்தியின் கொள்கையை இளையோர் மறந்து /
நவீன தொழில்நுட்பத்தில் வீழ்ந்து கிடக்கும் /
நிகழ்கால இளைஞர்களை மீட்டெடுக்க வா /
இயற்கை எழில் மிகு கிராமத்தை /
இந்தியாவின் முதுகெழம்பு என்று உரைத்தாயே/
விவசாயம் இன்றி முதுகெலும்பு வானவில்லாக /
வளைந்து முறிந்து கிடைக்கிறது நிமிர்த்திட வா /
கண்ட வெற்றியனைத்தும் அன்பால்
கண்டவையென்று /
காந்தி சொன்ன மந்திரம் மறந்து /
அன்பற்ற மனிதமற்ற மனிதனாக வாழும் /
அன்பர்களுக்கு மனிதநேயம் வளர்த்திட வா ...../