விடுதலை வேள்வியின் வீரப்பெண்மணிகள்

விடுதலை வேள்வியின் வீரப்பெண்மணிகள்
××××××××××××××××××××××××
சுதந்திரம் வேண்டுமென்று
சுழண்டனர் பம்பரமாக
மாதர்களும் ஆண்களுக்கு
நிகராகக் களத்திலே

வாள்யேந்தி அந்நியர்களை
வீழ்த்தினார் வேலுநாச்சியார்
வெள்ளையனே வெளியேறு
முழக்கமிட்டார் பட்டம்மாள்

தட்டச்சுப் பிரசுரங்களைத்
தாய்மார்களிடம் வழங்கியே
தட்டியெழுப்பினார் போராடத்
தாயகத்து இராதபாய்

அம்புசம்மாள் அந்நிய
ஆடைகளை ஒதுக்கி
கதர் ஆடைகளை
அணிந்திடச் செய்தாரே

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Oct-23, 8:14 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 245

மேலே