நவராத்திரி துதி
நவராத்திரி துதி
-----------------------------
அன்னையே ஆதிபராசக்தி
உன்னையே நினைந்துருகும்
நான் உன்னில்
சக்தியின் வடிவமெல்லாம்
உன்னருளால் காண்கின்றேன்
வேதத்தின் உட்பொருளாய்
வேதத்தின் தாயாய் வாணியாய்
கலைதெய்வமாய் சரஸ்வதியாய்
அன்னையே உன்னையே நான்
பொன்னரசியாய் மூவர்க்கும்
முதல்வன் நாரணன் தேவியாய்
மின்னும் நவரத்தினமாய்
அலைமகளாய் செவமெல்லாம்
எமக்கு அள்ளித்தரும் ஸ்ரீதேவியாய்
செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியாய்
எந்தாய் உனையே அல்லவோ
நான் பராசக்தியாய்
மலைமகளாய் பார்வதியாய்
வஞ்சகரிலிருந்து எளியோரைக்
காக்கும் மாகாளியாய்
நல்லோர்க்கு என்றும் அடைக்கலம்
அருளும் விசாலாட்சியாய்
சக்திஸ்வரூபியாய் நவதுர்கையாய்
நின்தாள் சரணம் என்றும்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி