நேசம்வைச்ச மாமனே நேரத்தோடு வந்திடய்யா

நேசம்வைச்ச மாமனே
நேரத்தோடு வந்திடய்யா
-----------------------------------------------------

மேனியெங்கும் உருண்டை
மஞ்சளை உரசிப்பூசி /
மாம்பழ வண்ணத்தில்
முசுக்கட்டடைச் சேலைக்கட்டி/

மல்லிப்பூத் தலைச்சூடி
மாமனுக்குக் காத்திருக்கேன் /
மாலை வெயில்
மயங்கும் முன்னே /

முப்படைக்குத் தலைவனானாலும்
மனைவியைத் தேடி /
மாவினம் பாவினமாக
மனைதேட வேண்டாமோ /

மாலையிட்ட மன்னவனே
மாதவிதேடிப் போனாயோ/
மனசு நிறைந்தவனே
மறவாது வந்திடய்யா/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (19-Oct-23, 4:26 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 26

மேலே