ஓர பார்வையில் உள்ளம் பறிகொடுத்தேன் 555

***ஓர பார்வையில் உள்ளம் பறிகொடுத்தேன் 555 ***


ப்ரியமானவள்...


அவள் மனதில் இடம்பிடிக்க
அவள் வரும் பாதையில்...

எத்தனை நாள் காத்திருந்து
ஜாடை மொழி பேசி...

ஓரபார்வையில்
உள்ளம் பறிகொடுத்து...

இதழ்கள் அசைவில்
வார்த்தைகளை பரிமாறிக்கொண்டு...

ஓர பார்வையில் ஓராயிரம்
சந்தோசத்துடன் திரும்புவது...

எத்தனை
சந்தோசம் மனதுக்கு...

பத்து நிமிடம் சந்தித்து பேச
எத்தனை நாள் காத்திருக்க வேண்டும்...

அரை கிலோமீட்டர்
தொலைவில்...

அக்கம் பக்கம் ஆட்களை
பார்க்க வேண்டும்...

அவள் முகம் பார்த்து
ஒருநிமிடம் பேச...

நாபுறமும் கண்டு நிமிடம்
பேசுவதில் எத்தனை சுகம்...

உள்ளத்தில் இருக்கும் அவளை
ஊரறிய மாலையிட்டு...

ஊரே
பொறாமைப்படும் அளவிற்கு...

நானும் அவளும்
வாழ வேண்டும்...

காதல்
என்றும் சுகமானது.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (19-Oct-23, 6:44 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 255

மேலே