நெஞ்சிருக்கும் வரை
நெஞ்சிருக்கும் வரை
×××××××××××××××××××
ஆவணியில் பூத்திட்ட
அனிச்சம் மலரே
தாவணிக் கனவுகளால்
தவிக்க விட்டவளே
பவானி ஆற்றோரம்
பரதேசியாகத் திரிகிறேன்
கவனிக்க வந்துவிடு
காதலைச் சொல்லிவிடு
கூவமாக மாற்றாது
கூடிவாழ அழைத்துவிடு
தவமிருந்து காத்திருக்கிறேன்
தாரமாகச் சேர்ந்துவிடு
பாவமென எண்ணிவிடு
பார்வையை திருப்பிவிடு
பாவியென் நெஞ்சத்திலே
பாவையே நீதானடி
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்