ஒரு தந்தையின் தாலாட்டு

ஒரு தந்தையின் தாலாட்டு.....!

தங்க மகளே கண்ணை மூடு
எந்தன் தோளில் மெல்ல தூங்கு.. ( 2 )

வாழ்வில் இன்பங்கள் வளரட்டுமே...
தொடரும் துன்பங்கள் தொலையட்டுமே..
தங்க மகளே....

உந்தன் செவியினிலே
தெய்வம் சொல்லும் கதை
கேட்டு நீயும் இங்கு
மெல்லச் சிரிப்பாய்.
அந்தச் சிரிப்பினிலே
வந்த தெய்வந்தனை
கண்டு நானும் அங்கு
என்னை இழப்பேன்.
தங்க மகளே....

வெல்லும் மழலையிலே
வெல்லம் வழிந்ததென
உள்ளம் நெகிழ்ந்து நானும்
உச்சி முகர்வேன்
தத்தி நடக்கையிலே
பொக்கைச் சிரிப்பினிலே
ரெக்கை கட்டி நானும்
விண்ணில் பறப்பேன்.
தங்க மகளே....
ஆரிரரோ ஆரிராரோ..
ஆரிரரோ ஆரிராரோ..

[ "செல்ல கிளியே மெல்ல பேசு..." என்கின்ற
சினிமா பாடல் மெட்டில் என்னுடைய
வரிகள்...20 / 10 /23 ]

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Oct-23, 6:52 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 3656

சிறந்த கவிதைகள்

மேலே