ஆயிரமாயிரம் ஆசைகளோடு அவள் 555
***ஆயிரமாயிரம் ஆசைகளோடு அவள் 555 ***
அவள்...
காதல் கொண்ட இருமனம்
இணைந்தது திருமணம்...
அழகு மழலையை
அவள் ஈன்றெடுக்க...
விதியின் விளையாட்டாய்
கட்டியவன் கைவிட...
ஒற்றை பூ மரமாய்
தனித்து நிற்க...
நிழலில் இளைப்பாற அன்று கிளிகள்
கூட வரவில்லை துணையென...
ஆகாயம் பார்த்த
பூமியாய் வளர்ந்து நிற்க...
இன்னல்கள் ஆயிரம் கடந்து
வசந்தகாலம் மெல்லவர...
துணையென நான் இருக்கிறேன்
என்று வெண்புறா ஒன்று வர...
வசந்தகாலமாய்
வாழ்வும் மாற...
மனதில் எத்தனை
ஆசைகள் இன்பங்கள்...
வெண்புறாவோ அவ்வப்போது
வந்து சென்றுவிட...
கட்டிய கூட்டில்
சிலநாட்கள் தங்கிவிடாதா என்று...
ஏக்கங்கள் பல
ஏமாற்றங்களும் பல...
வசந்த காலம் வீசுமா
இன்பமாக வாழ்வில்...
இறுதிவரை ஒற்றை மரமாய்
தனித்தே நிற்பாயோ...
ஆயிரம் ஆயிரம்
கேள்விகளுடன் அவள்.....
***முதல்பூ.பெ.மணி.....***