தாயின் நேசம்

#தாயின்.. #நேசம்
××××××××××××××××
#தாயின் கருவறை
தன்னிகரற்ற உடலுறை
சேயின் வாழ்வுறை
சேவகத்தின் உடனுறை

வாய் தாலட்டும்
வலக்கை சீரட்டம்
தோய்வின்றி பாலுட்டும்
தேயாதநி லவுயவள்

அணையாகப் பொறுமையவள்
அலைகடல் பாசமவள்
அணைக்கின்ற வான்யவள்
அன்பில் மழையவள்

வாழையடி வாழையாக
வாரிசுகளைச் சுமப்பவள்
தோழமையாகத் தோள்கொடுக்கத்
துவழாதவள் #நேசம்

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்d

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Oct-23, 8:15 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 617

மேலே