அன்னையே வாழ்க
அன்னையே வாழ்க
|||||||||||||||||||||||||||||||||||||||
உயிர்க்குள் உயிராக
உதிரத்தில் உருவாக
வயிற்றில் சுமந்து
வலியால் சனனமித்த
படைப்பின் சின்னமே
புரிதலின் ஒளியே
நிலாச் சோறுட்டி
நெஞ்சத்தில் துயிலுறச்செய்வயே
செந்தமிழ் வார்த்தைகளை
செங்குருதிக்குள் வார்த்தவளே
மெழுகுவர்த்தியாக உருகும்
மென்மையான தியாகியே
கலியுகத் தெய்வமே
கருணையின் வடிவே
வரங்களைக் கேட்டவுடன்
வாரி வழங்குபவளே
பாசத்தின் நேசமே
பண்பாட்டின் பொக்கிஷமே
எல்லாவற்றிற்கும் ஆரம்பமானவளே
எல்லையற்றவளே உனை வாழ்த்துகிறேன்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்