மலர்ந்திடும் மனம்
மலர்ந்திடும் மனம்
×××××××××××××××××××
பெண்மைக்குத் தாய்மையெனும்
பிள்ளைப்பேறால் பெருமை
பொருள் நிறைந்தும்
பிள்ளைச் செல்வம்
இல்லா வீடு
இருந்தும் பயணில்லை
கருவறைச் சுமந்து
குழந்தைகளின் கால்மிதி
உதையை இன்முகத்துடன்
உயிர்ப்பறிந்து இன்புறுவாள்
புளிப்பும் இனித்திடும்
சாம்பால் சுவையாக
பத்து மாதச்
சுமையை சுகமாக
வலியெல்லாம் இடிதாங்கியாகத்
தாங்கியே மறுபிறவி
உயிர் தந்து
உயிர் பெறுவாள்
பிள்ளைக் கனியொன்றின்
புன்னகைக் கண்டவுடன்
அத்தனையும் மறந்திடுவாள்
அரவணைத்து முத்தமிடுவாள்
தாய்மையின் மகிழ்வில்
மலர்திடுவாள் மனம்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்