உழவார அப்பர்
உழவார அப்பர் -- கலிவிருத்தம்
***********
(கூவிளம்/கூவிளம்/காய்/கூவிளம்)
வாடினன் சூலையின் வன்மத்தில் ;
----பாந்தமாய்ப்
பாடினன் பைந்தமிழ்ப் பதிகங்கள் ;
----மண்ணிடை
ஆடினன், பாடினன் அண்ணாவைக்
----கண்டனன் ;
நாடினன் நற்புகல் நாதனடி சேரவே!
*********
விளக்கம் :-
அண்ணாவை = அண்ணாமலை
யார்
நற்புகல் = ( புகலூர், திருப்புகலூர்)