என்றைக்கும் இன்பமுற இன்மொழியே பேசிடுவோம் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் 4)
என்றைக்கும் இன்பமுற இன்மொழியே
..பேசிடுவோம்;
சன்மானம் வேண்டிலமே சாற்றிடுவோம்
..நன்மொழியே!
முன்னோக்குப் பார்வையொன்றே முந்திநின்று
..நலமருளும்;
வன்னெஞ்சங் கொண்டோரும் வழிகோலி
..வருவாரே!
- வ.க.கன்னியப்பன்
சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!
சீர்களை கண்டபடி வகையுளி செய்தல் கூடாது.