அன்பே
என் அன்பே
நான் எழுதுகிறேன்,
ஏனென்றால் நான் எழுதுவதை விரும்புகிறேன்
நீ அதை படிப்பாய் என்று
எண்ணி எழுதவில்லை
நான் எழுதுகிறேன்,
ஏனென்றால் என்னுள்
இருக்கும் ஒருவர்
என்னை எழுத சொல்லுகிறார்
நீ அதை படிப்பாய் என்று
எண்ணி எழுதவில்லை.
நான் எழுதுகிறேன்,
ஏனெனில் ஒரு நாள்
நான் எழுதியதை மக்கள் படிப்பார்கள்....
படித்து விட்டு ஆஹா!
எனக்கு மிகவும் பிடித்துள்ளது
இதை எழுதியவர் யார்?
எனக்கு அதுவே போதும்
என் அன்பே,
தயவுசெய்து என்னை
தொந்தரவு பண்ணாதே
என்னை எழுத விடு.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.