நெஞ்சில் துணிவிருந்தால் எதையும் தாங்கலாம்
நெஞ்சில் துணிவிருந்தால்
×××××××××××××××××××××××
எதையும் தாங்கலாம்
×××××××××××××××××××
துணிவே துணை வெற்றி அடைவதற்கு/
துணிந்திடு சிங்கமென வேட்டையாடு வெற்றிதனை/
தன்னம்பிக்கையெனும் மூன்றாம் கை உணக்கிருக்க/
தாமதமின்றி முயற்சி செய்து - இலக்கு/
வகுத்து முன்னேற முயன்றிடு வெற்றியடைய/
வானம் தொட்டு விடும் தூரம்தான்
சிந்தனை செய்து வானத்து பறவையாக /
சிறகடித்து வெற்றியால் விண்னை தொட்டிடு /
தோல்வி அடைந்தாலும் விடா முயற்சியுடன் /
தடைகளை உடைத்து வெற்றியின் வழிக்கு/
பாதையாக மாற்றி முன்னேறி நடந்தால்/
பசிபிக் பெருங்கடலும் உன் காலடியில்/
சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்