வானமே எல்லை வாழலாம் வா
வானமே எல்லை வாழலாம் வா
××××××××××××××××××××××××××××××
தொற்றால் இழந்தோம்
தொடர்ந்த வேலையை/
தொலைந்ததைத் தேடாது
தொடங்கிடுப் புதுமையை/
காற்றில் கலந்திடும்
கடல் நீர்தான் /
கார்மேக உருவெடுத்து
கனமழையாகப் பொழியும் /
பாறையின் இடை
நுழையும் நீர்தான் /
சுனையாக உருமாறி
சிற்றாறாக ஓடும் /
நீராக வழிதேடு
நழுவிட(மாற்று வேலை) முயன்றிடு /
நெகிழ்ச்சி விலக்கிடு
நம்பிக்கையோடு உழைத்திடு/
முடியுமென முயன்றால்
முடியாததும் முடியும்/
வானமே எல்லை
வாழலாம் வா /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்