என்றும் உனக்கு தொல்லையாக மாட்டேன் 555

***என்றும் உனக்கு தொல்லையாக மாட்டேன் 555 ***


உயிரானவளே...


நாம் பேசிக்கொள்ளும்
ஒவ்வொரு நிமிடமும்...

நீயும் என்னைப்போல் விருப்பத்தோடு
பேசுகிறாய் என்று நினைத்திருந்தேன்...

இன்றுதான் சொன்னாய்
விருப்பத்தோடு இல்லை...

நீ பேசுகிறாய் என்றுதான்
நானும் என்கிறாய்...

என்
கைபேசி அழைப்புகளால்...

உன் பணிக்கும்
உன் மனதுக்கும்
இடையூறாக இருக்கிறது என்று...

ஆரம்பத்திலேயே நீ
சொல்லி இருக்கலாம்...

நான் உன்னை தொல்லை
செய்திருக்க மாட்டேன்...

என்னால்
உனக்கு தொல்
லை என்று...

நீ சொன்னபோதுதான்
நானும் உணர்ந்தேன்...

என்னுயிரே இனி நானும்
என் அழைப்புக
ளும்...

உனக்கு
தொல்லையாக இருக்காது...

இத்தனை நாள் கொடுத்த
தொல்லைக்கு மன்னிக்க
வும்...

என்றும் உன்
நலம் விரும்பும் ஒருவன்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (1-Nov-23, 2:04 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 528

மேலே