சந்தையில் கிடைக்குமா

சுவரின் மேலிருந்து
இருபுறமும் நோக்கி
குரங்காய் தாவும்
மனதின் மேல்
குருபார்வை விழுந்தால்
தத்துவம் விளங்கிவிடும்
திறந்த பெட்டியாய் மனம்
தேவையானதை எடுக்க
தேவைக்கேற்ப
மூடவும் திறக்கவும்
ஐந்து சாவியுண்டு
குரு கூற
தன் கையில் உள்ளது
ஐந்து சாவி என்று
தெரியாத சீடன்
குருவிடம் கேட்க
சாவி சந்தையில்
கிடைக்குமா? என்று
குருவின் தத்துவங்கள்
இன்றும் சந்தையில்
விலை போகிறது
பாவம் புரியாத
மூடன் சீடன்

எழுதியவர் : Rak தென்றல் (4-Nov-23, 2:51 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 148

மேலே