இன்முகங் காட்டும் நல்லா ரினியவர் கன்னி யப்பர் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பொன்னகர் வாழ்ந்த நல்ல
..புனிதரா மென்றே சொல்வேன்;
பொன்மய மென்றே போற்றும்
..புத்தரின் வாரி சென்பேன்!
பின்புலம் நோக்கி னென்றும்
..பேணிடும் நல்லா ரென்பேன்;
இன்முகங் காட்டும் நல்லா
..ரினியவர் கன்னி யப்பர்!

- வ.க.கன்னியப்பன்

சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!

சீர்களை கண்டபடி வகையுளி செய்தல் கூடாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-23, 5:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே