விவேக சிந்தாமணி - நூல் - பாடல் 1 - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் மா தேமா / விளம் மா தேமா)
(’ப’ ‘க’ வல்லின எதுகை)

ஆபத்துக் குதவாப் பிள்ளை;
..அரும்பசிக் குதவா அன்னம்;
தா’க’த்தைத் தீராத் தண்ணீர்;
..தரித்திரம் அறியாப் பெண்டிர்;
கோபத்தை அடக்கா வேந்தன்;
..குருமொழி கொள்ளாச் சீடன்;
பாபத்தைத் தீராத் தீர்த்தம்;
..பயனில்லை ஏழும் தானே! 1

எழுதியவர் : (10-Nov-23, 8:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே