புரிதல் மிகுந்து வாழ்ந்தாலே புகழு முலகம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

பருவம் நல்குந் தொல்லைகளைப்
..பக்கு வமாக விலக்கிடலாம்;
புரிதல் மிகுந்து வாழ்ந்தாலே
..புகழு முலக முன்றனையே!
செருக்கு மிக்கோர் செருக்கழிந்தாற்
..சிந்தை மகிழ்ந்து வாழ்ந்திடலாம்;
பொருண்மை மிக்க வாழ்வொன்றே
..போற்றிப் புகழுந் தன்னாலே!

- வ.க.கன்னியப்பன்

சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-23, 3:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே