வெண் பனிச்சிலை அழகு
![](https://eluthu.com/images/loading.gif)
நேரிசை வெண்பா
குளத்தில் அலர்புத்த முண்டக மெந்தன்
உளங்கவ ருத்தம மாது -- பளக்கும்
பளிங்கோ மயக்கு பனியின் சிலையோ
விளிப்பேன் இதயத்தை வென்று
இவள் என்ன குளத்தில் இன்று முளைத்து மலர்ந்த தாமரையோ
பளிங்கு சிலையோ அல்லது பனியில் செய்த உருவமோ என்று
எண்ணும்படி இருக்குமிவள் எனது உள்ளத்தை கவர்ந்து விட்ட
அழகிய மாது. இன்று அவளிடம் எனது ஆசையை சொல்லி அவளது மனதை
என்வசம் கொள்வேன் என்பதாம்