உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்
×××××××××××××××××××××××××××××××
அன்னக்கிளி வாடுகிறேன்
அத்தானைத் தேடியே
கன்னித்தீவாகத் தனிமையில்
கண்ணீரோடு மிதக்கிறேனே

அன்னமது யென்னழகு
அன்னமது இறங்காது
கன்னக் குழியழகு
காணாது பள்ளமானதே

வன்ன வைரக்கல்லாக
வைபோகத்தில் கரம்பிடித்தேன்
வன்னமிழந்து உப்பாக
வாழ்விழந்து கரைகிறேனே

சின்னப் பனித்துளி
சிறுபுல்லோடு ஊடலாகுது
மன்னவனை எதிர்பார்து
மலராக உதிருகிறேனே

மின்னல் நொடியில்
மலந்து மகிழ்கிறது
என்னவரே நினைத்து
ஏங்கியே தேய்கிறேனே

பின்னல் வலையில்
பிடிபட்ட மீனாக
சின்னாபின்னமாகி உலர்ந்து
சிறுத்துக் கருவாடுயானனே

பொன்னாக உருகினாலும்
பெண்மை மாறாது
தன்னால் இயலவில்லை
தாலிமுடிந்தோனை மறந்திடவே

தென்னங்கீற்றாக வரவேற்று
தோரணமாகக் காத்திருக்கிறேன்
சின்னவரே வருவாயோ
சிற்றின்பம் தருவாயோ

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (15-Nov-23, 8:49 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 22

மேலே