மாதுளை முத்து மௌனப் புன்னகையே உனக்கிரு கலிவிருத்தம்
காய் காய் மா விளம் எனும் ஒரே வாய்ப்பாட்டில்
மாற்றி அமைக்கப்பட்ட கலிவிருத்தம்
எதுகையுடன் மூன்றாம் சீர் மோனையும் பொலிவதைக் காணவும்
விழையும் யாப்பார்வலர்கள் ரசித்து மகிழட்டும்
மாதுளைமுத் தைசிந்தும் மௌனப் புன்னகை
காதலைநீ இருகண்ணின் கயலால் எழுதினாய்
நீதிசெய்ய தவறினார்கள் நின்கா தலுக்கிவர்
காதலிங்கு கண்ணீரின் கவிதை ஆனதே
------------------------------------------------------------------------------------------------------------
பல வாய்ப்பாட்டால் அமைந்த கலிவிருத்தம் முதல் பதிவு
மாதுளைமுத் தைசிந்தும் மௌனப் புன்னகை
காதலை கண்ணின் கயலால் எழுதினாய்
நீதி செய்யவில்லை நின்காத லுக்கிங்கு
காதல் கண்ணீர் கவிதை ஆனது
----------------------------------------------------------------------------------------------------------