குங்குமச் சிமிழ்போலும் சிவந்திடும் இதழியே கலிவிருத்தம் இரண்டாம் வடிவமும் உனக்கே

விளம் காய் விளம் விளம் எனும் ஒரேவாய்ப்பாட்டிற்கு மாற்றி
அமைக்கப்பட்ட இரண்டாவது வடிவக் கலிவிருத்தம்
எதுகை மூன்றாம் சீர் மோனை முதல் சீர் ஒரே கூவிளம்
யாப்பு பாவின ரசிகர்கள் படித்து மகிழட்டும்

குங்குமச் சிமிழ்போலும் சிவந்திடும் இதழியே
திங்களை வென்றிடுவாய் போட்டியில் பூமியில்
மங்களம் நிறைநற்பொன் மஞ்சளின் நெற்றியில்
குங்குமம் செங்கதிர்போல் திகழ்ந்திடும் அழகினில்

--------------------------------------------------------------------------------------------------------------------
பல வாய்ப்பாட்டில் அமைந்த முதல் வடிவக் கலிவிருத்தம்

குங்குமச் சிமிழ்போல் சிவந்த இதழ்கள்
திங்களை வென்றிடுவாய் போட்டியில் பூமியில்
மங்களம் நிறைபொன் மஞ்சள்பூ நெற்றியில்
குங்குமம் செங்கதிர்போல் திகழும் அழகினில்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Nov-23, 4:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே