இன்றைய தாலாட்டு பாடல்

இன்றைய தாலாட்டு பாடல்
++++××+×++++++××××+++

ஆராரோ.. ஆரிராரோ என் கண்ணே கண்மணியே /
உனக்கு ஆராரோ ஆரிராரோ /

அப்பா கைப்பேசியில் முகநூலில் மூழ்கி விட்டார்/
என் கண்ணே கண்மணியே /

அம்மா டிவி தொடர் பார்க்கணும்
ஆராரோ ஆரிராரோ /

தாத்தாவும் பாட்டியும் முதியோர் இல்லத்தில்

என் கண்ணே கண்மணியே /

மாமன் வெளிநாட்டில் அடிமையாக இருக்கிறான்
ஆராரோ ஆரிராரோ /

உனக்கு மச்சினன் மார் மது ஊட்டுவான்
என் கண்ணே கண்மணியே /
இந்தக் கால தாலாட்டு இது கண்ணே
இதை கேட்டு நீ உறங்கு

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (18-Nov-23, 5:57 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 199

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே