இறைவி

இறைவி
########

தரணி முழுமையும்
தன்னால் காத்திட /

இயலாதுயெனத் தாயை
இறைவன் படைத்தான் /

இறைவன் அனுப்பி
இறைவியாக படைத்தவளை /

கடவுளின் மேலாக
கருவறை சுமந்து /

கருணையினால் கரைந்தவளை
காணயிடம் (முதியோர் இல்லம்) அனுப்பிவிட்டு /

கடவுளைத் தொழ
கோவிலில் தேடுவது /

மரத்தை வெட்டியவன்
இளைப்பாற நிழலை /

தேடிச் செல்பவனைப்
போன்ற அறியாமை /

சமத்துவப் புறா ஞான அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (24-Nov-23, 6:37 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 163

மேலே