என் கருவறை சிந்திய இரத்தம் உன்னை சுமந்த வலிகளை சொல்லும்
என் கருவறை சிந்திய இரத்தம்
உன்னை சுமந்த வலிகளை சொல்லும்
*****************************
நீ இருந்த வயிற்றில் பசி
நீங்காமல் வெறும் வயிற்றோடு காய்ந்த
சுள்ளியாக வயலோரம் கேட்பாரற்று கிடைக்கிறேன்
கள்ளிப்பால் உன் அப்பனும் நீ
பிறந்திட்ட போது கொடுக்க சொன்னார்
மறுத்துவிட்ட நான் பாலுட்டி சீராட்டி
உன்னை வளர்த்தேன் உன்னை நம்பி
உயிர் வாழ்கிறேன் சாப்பாடு போடாட்டாலும்
பரவயில்லை சாவதற்குள் உன் முகம்
பார்த்து விட வேண்டும் மறவாது
தாயகம் வந்து ஒரு முறையேனும்
தாயிடம் முகம் காட்டு இறந்துவிடுகிறேன்......