அற்புதமான அம்மா கவிதை
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
*அம்மா*
*ஒரு*
*அதிசயம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
💙 உப்பில்லாத உணவும்
சுவையாகத்தான் இருக்கும்
அம்மா
பிசைந்து கொடுத்தால்...!!
🩷 அம்மா
ஒவ்வொரு நாளும்
கவலைப்படுவாள்
ஆனால்...
ஒரு நாளும்
தன்னைப் பற்றி
கவலைப்பட மாட்டாள்...!!
💚 அம்மா
பரிமாறும் போது மட்டும்
விரைவில்
வயிறு
நிறைந்து விடுகிறது
பாசத்தையும்
சேர்த்து பரிமாறுவதால்....!!
💛 உடல் நலக்குறைவின் போது
மருத்துவரின்
ஊசியை விட...
அம்மாவின்
உபசரிப்பே
விரைவில் குணப்படுத்துகிறது...!!
🧡 வாய் வலிக்க திட்டினாலும்
கடைசியில்
மனம் வலிக்க
வேதனைப்படுவது
தாய் மட்டுமே.....!!
🤎வலிகளிலேயே பெரிய வலியான பிரசவ வலியை தாங்கிப் பெற்றதற்கு
நன்றி கடனாகத்தான்
நமக்கு "வலி" வரும்போதெல்லாம்
"அம்மா !" என்று அழைக்கிறோமோ..?
💜 தாயோடு வேண்டுமானால்
தெய்வத்தை ஒப்பிடலாம்
ஆனால்.....
தெய்வத்தோடு கூட
தாய்யை
ஒப்பிட முடியாது....!!
*கவிதை ரசிகன் குமரேசன்*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈