பொழிலவன் சரவணப் பொய்கை என்றுபெயர்

மயிலவன் மால்மருகன் மயிலவன் ஏற்வூர்தி
குயிலவன் தோட்டத்தில் கூவும் இசைப்பறவை
எழில்விழியர் இருவர் இருபக்கம் அமர்வர்
பொழிலவன் சரவணப் பொய்கை என்றுபெயர்
----இயல்பின் இலக்கியம்
எதுகை இருவிகற்பமானதால் விருத்த பாவினத்தில்
சேர்ப்பதற்கில்லை

மயிலோன் மருகன் மயிலவன் ஊர்தி
குயிலவன் தோட்டத்தில் கூவும் பறவை
எழில்விழி யர்கள் இருபக்கம் சேர்வர்
பொழிலோ சரவணப்பொய் கை

----இப்பொழுது யாப்பின் வெண்பா
இருவிகற்பத்திற்கு வெண்பாவில் அனுமதி உண்டு
மோனைகள் இன வர்க்க மோனைகள்

இன மோனையுடன்(ம ம கு கூ எ ஏ பொ பா) இப்படியும் புனையலாம்

மயிலோன் மருகன் மயிலவன் ஊர்தி
குயிலவன் தோட்டத்தில் கூவும் பறவை
எழில்விழி யர்களும் ஏறுமயில் சேர்வர்
பொழிலைச் சரவணமென் பார்

சில பொருட் குறிப்புகள் :
மருகன் மால்மருகன் ----திருமாலின் மருமகன் முருகன்

எழில் விழியர் --- வள்ளி தெய்வானை

மயூர் தமிழில் மயில் மயூரம் மாயூரம் ஆகி கொச்சையில் திரிந்து
மாயவரம் ஆனது மயில் மாயமாய் மறைந்து போனது
மீண்டும் எழில் தமிழில் மயிலாடுதுறை ஆனது
மயில் வாகனன் மயிலவன் கலை மயில்கள் ஆடும் துறை
மயிலாடு துறை
சென்னையில் மைலாப்பூர் என்று ஒரு புறநகர் பகுதி உண்டு
மைலா மயிலா ? எது சரி ?

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-23, 8:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே