வீட்டைக் குலைத்திடும் குடியரசு -- கட்டளைக் கலித்துறை

வீட்டைக் குலைத்திடும் குடியரசு -- கட்டளைக் கலித்துறை
***************

கோட்டை யிலேறிடப் பொய்கள் உரைத்த குடியரசோ ;
நாட்டின் நிதியது மல்க குடிதனை நல்பெருக்கி ;
ஆட்டை வளர்த்ததைக் கட்டிப் பலிகொளும் அங்கமென ;
வீட்டின் நிதியதைக் கொய்து இருப்பதும் விந்தையாமே !
***********

நெடிலடிகள் நான்கு. முழுவதும் வெண்டளை பயின்று வந்துள்ளது.
ஒவ்வொரு அடியிலும் ஐந்தாம் சீர் விளங்காய் இருப்பது.
நேரசையில் தொடங்கவே அடிக்கு 16எழுத்து .
இறுதி அசை ஏகாரம். அனைத்து அடிகளிலும் ஒரே எதுகை.

தேமா /கருவிளம் /தேமா / கருவிளம்/ விளங்காய்

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Nov-23, 12:12 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 41

மேலே