புன்னகை பூவிதழாள் பால்கறக்க வந்தபோது

தென்றலிளம் காற்றினில் தேன்மலர்கள் ஆடிட
கன்றிளம் குட்டிதுள்ளி தாய்மடியில் பாலருந்த
புன்னகை பூவிதழாள் பால்கறக்க வந்தபோது
அன்பினில் பார்த்திடும் ஆ

---ஆ என்றால் பசு என்று பொருள்
எடுத்துக்காட்டு ஆவின் பால்
பூ என்பதுபோல் ஆ ஓரெழுத்துச் சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-23, 7:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே