வெற்றியும் தோல்வியும்

வெற்றியும் தோல்வியும் விடா பிடி சண்டைக்காரர்கள்.
வென்று வருவது வெற்றி;
விரட்டி வருவது தோல்வி;
ஆறிலும் தோல்வி அறுபதிலும் தோல்வி;
ஆறுதல் பரிசு இல்லை வெற்றி;
கேட்டுப்பார் கேட்டுப்பர் கேள்விகள் ஆயிரம்;
பதில் கேட்கப்பார் கேட்கப்பார் பிரச்சனைகளும் ஓராயிரம்;
கேட்டுப்பார் கேட்கப்பார் தோல்விகளும் தொல்லைகளும் ஓராயிரம்;
நீ
தட்டிப்பார் தட்டிப்பார் பதில்களும் விடைகளும் ஆயிரம்;
முட்டிப்பார் முட்டிப்பார் வெற்றியும் நூறாயிரம்.

தோல்வியும் வெற்றியும் தொடரும் பயணம்;
தோல்வி என்பது தொல்லை இல்லை;
தோல்வி துவங்கப்படாத முயற்சி; தொடப்படாத வெற்றி;
வெற்றி தழுவி வரும்
தோல்வி நழுவி வரும்;
தோல்வி நழுவிப்போன வெற்றி வாய்ப்பு;
தோல்வி தூசி தட்டாத தூங்கும் முயற்சி;
வெற்றியைத் தாங்க தோல்வியையும் தொடரு;
தோல்வியின் உயரத்தை வெற்றி என்னும் சிகரத்தில் ஏறி வீழ்த்து.
தோற்கடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் படுதோல்வி;
தோல்வியைக் கடந்தால் வெற்றி
தோல்விக்குப் பின் தொடும் வெற்றியே சாதனை தோழா;
தோல்வியை துயரம் என்று நினைக்காதே;
தொடை நடுங்கிக் கிடந்தால் தொடரும் தோல்வி தான் தோழா;

துவக்கம் என்பது தொட(ர) இருக்கும் தடங்கள் (நடைமேடை);
துவக்கம் ஒருபோதும் தடங்கள் அல்ல;
துவக்கம் ஒருபோதும் தூங்கக் கூடாது;
துவக்கம் முடிவின் துவக்கமாக இருக்காது,
முடியும் துவக்கமாக வேண்டும்;
துக்கம் தாங்கக் கூடாது;
தாக்கம் உன்னை வீழ்த்தக் கூடாது;
தயக்கம் உன்னை தடுமாற வைக்கக்

கூடாது;

தோல்வி தோற்றவனிடம் கேட்ட வேண்டிய கேள்வி;
தவறு செய்தால் தோல்வி;
தடுமாறினால் தோல்வி;
தாமதித்தால் தோல்வி;
தடம் புரண்டால் தோல்வி;
தலை குனிவு தான் தோல்வி;
தோல்வி நீ எழுதாது இருக்கும் பரிச்சைத் தாள்;
வெற்றி என்பது நீ எழுதிய பரிச்சைக்கான பாசாகும் மதிப்பெண்.
மிகப்பெரிய வெற்றி என்பது சாதனை படைக்கும் மதிப்பெண்;
தோல்வியைத் தோண்டினால் தோல்வி;
தோல்வியைத் தாண்டினால் வெற்றி;

தோல்வியை கேள்வியாக்கு;
தொல்லையை முயற்சியாக்கு;
வெற்றியை வேள்வியாக்கு;
பயத்தை விடு, பயணிப்பதில் வரும் தடையை தாண்டி நடைபோடு;

பாதியில் வருவது தோல்வி;
பாதிப்பால் வருவது தோல்வி;
பயணத்தை முடித்தால் வருவது வெற்றி.
விழுவது தோல்வி, எழுவது துவக்கம்,
வீழ்த்துவது வெற்றி.
வெற்றி என்பது துணைபோகாத தோல்வி;
வெற்றி தோற்கடிக்கப்பட்ட தோல்வி;
தவறாமல் தவறு இல்லாமல் செய்யும் செயல்தான் வெற்றி;
திடமாய் இருந்தால் வெற்றி;
திட்டத்தோடு செயல் பட்டால் வெற்றி ;
திருடனாய் வந்தால் தோல்வி.

வெற்றி நெற்றியில் எழுதப்படவில்லை;
வெற்றி வேர்வையால் எழுதப்படுகின்றது.

வெறியால் வருவது வெற்றி;
வரியால் வரையப்படுவது வெற்றியில்லை.
விடா முயற்சி என்னும் உலியால் செதுக்கப்படுவது வெற்றி.

வெற்றி என்பது முடிவல்ல;
தோல்வி என்பது இறுதி அல்ல;
தோல்வியும் கேள்வியும் தொடர்கதை இல்லை;
தோல்வி தொத்தினாலும் தொடரவிடாதே;
கேள்வி என்பது கேட்கப்படக் கூடிய பதில்;
வேள்வி வேதாந்தத்தை தேடும் கலை;
தொல்லை என்பது எல்லை மீறிய செயல்;
எல்லை என்பது இலக்கை அடையும் மையில் கல்;
இல்லை என்பது இழந்த நம்பிக்கை;

சுமையை வெறுப்பவன் சோம்பேறி;
சுவையை மறக்க வேண்டியவன் சன்யாசி;
சுகத்தை விரும்புபவன் சுகவாசி;
சுற்றத்தை மறப்பவன் சண்டாளன்.

வீம்பு வெறுக்க வைக்கும் வம்பு;
வம்பு துவக்க இருக்கும் குறும்பு;
குறும்பு எறும்பாய் கடிக்கும் குசும்பு.
குற்றம் கொட்டும் விடம்;
சுற்றம் சுமை தாங்கும் இடம் (கூட்டம்);
சோகம் சுமக்கும் பாடம்.
சுகம் சுமைதேடும் இனம்;
சுகம் கண்டால் வெற்றி இல்லை;
சுமை என்றால் வெற்றி இல்லை;
சுவை என்றால் வெற்றி;

விழுந்தால் எழவேண்டும்;
வீழ்ந்தால் மீழவேண்டும்;
வாழ்ந்தால் சாதிக்கவேண்டும்;
வழிந்தால் சோதிக்கவேண்டும்.
உடைந்தால் ஒட்டவேண்டும்;
கிடந்தால் தழைக்கவேண்டும்;
இழந்தால் அழவேண்டும்.
இருந்தால் வாழவேண்டும்.

நிதானம் தவறிழைக்கும் போது,
தர்மம் தலை குனியும்;

நிதானம் தவறும் போது,
நிம்மதி விலைபோகும்;
நீதி வழுக்கும்போது,
அநீதி வாலாட்டும் ( வழி நடத்தும்).


தோற்றுப்பார் தோற்றுப்பார் தோல்வியின் சுமை தெரியும்;
வென்று பார் வென்று பார், வெற்றியின் சுகம் தெரியும்;
நின்று பார் நின்று பார் போராட்டத்தின் ரணம் தெரியும்.

ஆறுதலைத் தருவதில்லை வெற்றி;
ஆறுதல் பரிசல்ல வெற்றி;
அறைகூவலால் பெற முடியாது வெற்றி;
மாறுதலைத்தருவது வெற்றி;

தொத்தி வருவதில்லை வெற்றி;
கத்தி கதறி வருவதில்லை வெற்றி;
கத்தி முனையில் பெறுவதில்லை வெற்றி;
கண்ணக்கோல் வைத்து அபகரிப்பதில்லை வெற்றி;.

நம்பிக்கை உடைந்தால், கிடைப்பதில்லை வெற்றி,
நம்பி கை வைத்தால் கிடைப்பது வெற்றி.
தட்டிப் பறிப்பதனால் வருவது இல்லை வெற்றி;
தண்டனை கொடுப்பதால் வருவது இல்லை வெற்றி;
தகாத செயலால் பெறுவதில்லை வெற்றி;
தவறிக் கிடைப்பதில்லை வெற்றி;
தவறுகளால் வருவதில்லை வெற்றி;
தள்ளி நின்றால் வராது வெற்றி;
தோல்வியும் கற்றுத் தரும் வெற்றி.

நடந்ததை நினைத்தால் தோல்வி;
கடந்திட நினைத்தால் வெற்றி;
பாதியில் வருவதில்லை வெற்றி;
பாதிப்பால் வருவதில்லை வெற்றி;
பாதை மாறினால் கிடைக்காது வெற்றி;

வெற்றி வெற்றி விவேகமாய் செயல் பட்டால் வெற்றி;
தோல்வி தோல்வி விரோதத்தோடு; செயல்பட்டால் தோல்வி;
விவேகமாய் செயல்பட்டால் வெற்றி;
விரதத்தால் பெறமுடியாது வெற்றி;
வெறுப்போடு நடந்தால் கிடைக்காது வெற்றி;
பொறுப்போடு போராடினால் கிடைக்கும் வெற்றி;
பொறாமையில் மலராது வெற்றி;
பிழைகள் இருந்தால் வராது வெற்றி;
பிடிவாதத்தால் வராது வெற்றி;
முயற்சி என்ற மூச்சே வெற்றி.
காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (21-Nov-23, 7:59 am)
Tanglish : vetriyum tholviyum
பார்வை : 571

மேலே