திசைமாறும் பிள்ளைகற்

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

*திசைமாறும்*
*பிள்ளைகள்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆


மகிழ்ச்சிக்காக
கொண்டுவரப்பட்ட
பொழுதுபோக்குகள்.....
இன்று
கொண்டு வருகிறது
கவலைகளை மட்டுமே...!!!

சீட்டில்
ரம்மி விளையாடினால்
மானம் போகும் என்று
போதிக்கப்பட்ட காலம் போய்....
ரம்மி விளையாடினால்
வருமான வரும் என்று
அறிவிக்கப்படுகின்ற.....

'தெருக்கூத்து'கள்
கலைகளை வளர்த்து....
கலைஞர்களை
வாழ வைத்தது.....
இன்று
தெருக்கள் தான் இருக்கிறது
கூத்துக்கள் இல்லை.....
ஓ ! அதுதான்
'வீட்டுக்கூத்தாக'
மாறி உள்ளதோ.....?

அன்று.....
சிரிப்புக்களையும்
சிந்தனைகளையும்
தூண்டிவிடும்
பொம்மலாட்டம் இருந்தது.....
இன்றும் இருக்கிறது
காமத்தையும்
கற்பழிப்பையும் தூண்டிவிடும்
" பொம்பள ஆட்டம் "

அன்று
கம்மங்கறையில்
பிள்ளைகள் பட்டம் விட்டு
மகிழ்ந்தனர்...
இன்று
வட்டம் கட்டி
கேம் விளையாடுகின்றனர்....

நீர் நிலைகளில்
நீச்சல் அடித்து
விளையாடி மகிழ்ந்ததால்....
வாழ்க்கையில்
எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்தனர்....
இன்று
அலைபேசியில்
உட்கார்ந்து கொண்டு
விளையாடுவதால்....
வாழ்க்கை கடலில்
வரும் அலைகள்
இவர்களை
இழுத்துச் செல்கின்றது....

ஓடி பிடித்து
விளையாடியதால்....
முதுமையிலும்
இளமையாக இருந்தனர்.....
அலைபேசி
உட்காந்து பிடித்து
விளையாடுவதால்
இளமையிலேயே
முதுமைகளாக உள்ளனர்.....

இயற்கையிடம்
தன்னை தொலைத்த படைப்பாளியாக
மீட்டெடுத்தனர்......
இன்று
செயற்கையிடம்
தன்னை தொலைத்து
மீட்டெடுக்கின்றனர்
மனநோயாளியாக.....

கோழிக்குண்டு
கிட்டி புள்ள
வில் அம்பு விளையாடி
இலக்கு தவறாமல்
அடித்து பழகி
தங்கள் வாழ்க்கையில்
குறிப்பிட்ட இலக்குகளை
அடைந்தனர்
இன்று
துப்பாக்கி சண்டை
வன்முறை
வெட்டுக்குத்து
விளையாட்டுக்கள் விளையாடி
அதற்கு இவர்களே
பலியாகின்றனர்......

அன்றைய
பொழுதுபோக்குகள்
பொழுதுகளை மட்டுமல்லாது
பழுதுளையும் போக்குகிறது....

ஓய்வு நேரங்களையும்
பயனுள்ளதாக
மாற்ற கண்டுபிடிக்கப்பட்ட
பொழுதுபோக்கு
வேலை நேரங்களையும்
பயனற்றதாக மாற்றி விட்டது.....

பாரம்பரிய
விளையாட்டு பற்றி
விழிப்புணர்வு கொடுப்போம்
திசை மாறி போகும்
அறியா பிள்ளைகளை
திசை மாற்றுவோம்.....

*கவிதை ரசிகன் குமரேசன்*

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

எழுதியவர் : கவிதை ரசிகன் (24-Nov-23, 8:23 pm)
பார்வை : 12

சிறந்த கவிதைகள்

மேலே