நினைவுகள்
நினைவுகள்
###########
உதிரும் பூவும்
மலரும் மொட்டும் /
மல்லிகைச் செடியில்
இணைந்து மலர்வதாக /
கண் கெடும்
கணினியில் விளையாடாது /
பருவ நினைவுகளான
பழமை விளையாட்டுகளை /
பல வித்தைகளாக
பாட்டி காட்டி/
பரவசத்தில் ஆழ்த்திட
பேத்தியின் சிரிப்பால் /
பேரானந்தத்தில் மகிழ்ந்து
பதின்பருவ பெண்ணாக /
அன்பின் தோட்டத்தின்
பூவாக மலர்கிறாள் /