இறைவணக்கம்
கண்ணால் இறைவன் வடிவழகு கண்டு
கண்குளிர காதால் அவன் புகழ்க்கேட்டு
வாயால் அன்னவன் புகழ்பாடி கையால்
மலர்க் கொண்டு அர்ச்சித்து காலால்
மண்ணில் விழுந்து அவனை வணங்கிடுவோம்
வாழ்க்கையில் பிறவிப் பயன் எய்திடுவோமே