மன்னுசு மன்னுசா

சோதிடரே நாங்க எதிர்பார்க்கவே இல்லை.
@@@##@
என்னையா சொல்லற?
@@@###
என் மனைவிக்கு முதல் மகப்பேறிலேயே இரட்டைப் பிறவிகள்.‌ அதுவும் பெண் குழந்தையும் ஆண் குழந்தையும்.
@@@@@@
சந்தோசம் தம்பி.‌ சாதகக் குறிப்பு எழுதி பேரு வைக்கணும். அவ்வளவு தானே.
அவர்கள் பிறந்த நேரத்தைச் சொல்லு.
@@@@@@
நேற்று காலை அஞ்சு மணிக்கு.
@@@@@@@
பிரம்ம முகூர்த்தம். அருமையான நேரம்.
(சிறிது நேரம் கழித்து) அவங்க பிறந்த நேரம் இராசிப்படி நான் சொல்லற பேருங்கள வச்சிடு. எல்லா வளங்களும் பெற்று ஊர் மெச்ச வாழ்வார்கள். (ஒரு தாளில் இரண்டு பெயர்களை எழுதி அந்தத் தாளை மடித்து) இந்தா. இந்த மடித்த தாளை வீட்டில் சாமி படத்துக்கு முன்னாடி வச்சு பூசை பண்ணி உங்க மாட்டிகிட்டு பேரை படிச்சுக் காட்டு.
@@@@@@
சரிங்க சோதிடர் ஐயா.
(🏠 வீட்டுக்கு வந்தபின் குடும்ப உறுப்பினர்கள் சோதிடர் கொடுத்த முடிக்கப்பட்ட தாளை வைத்து வணங்கி பூசை செய்கிறார்கள்).
@@@#######
பேருங்களப் படியா பேரா.
@@@@@#@
பையன் பேரு 'மன்ஷ்'.
@@@@###
என்னது 'மன்னுசா'வா?
@@@@@
பாப்பா பேரு 'மன்ஷா'.
@@####
'மன்னுசா'வா?
என்னடா பேரா இரண்டு குழந்தைகள் பேரும் ஒரே மாதிரி உள்ளது.
@@@###@@
இரட்டைப் பிள்ளைகள். அப்படித்தான் பேரு வைக்கணும். நீங்கள் பேருங்களத் தப்ப சொல்லறீங்க பாட்டி. 'மன்ஷ்', 'மன்ஷா'.
@@@@@@@@@
இந்திப் பேரா இருந்தால் சரிதான்டா. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். தமிழ்ப் பேருங்களைத்தான் சரியாச் சொல்லணும்.
@@@#@#@@

Mansh = Generation. Masculine name.
Mansha = Wish. Feminine name

எழுதியவர் : மலர் (26-Nov-23, 6:40 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 32

மேலே