பட்டமளிப்பு விழா

அன்புள்ள நமது கட்சியின் வதந்தி வாரிசுகளே அவதூறு அற்புதர்களே!
நமது கட்சியின் தலைமை நிலையம் நமக்கு புனிதமான கோயில் மாதிரி. நம் கட்சியின் முக்கிய கொள்கைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

வதந்தியைப் அவதூறுகள் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்பதை நாம் அறிந்தே நமது கட்சியின் அவதூறு அணிக்கு ஒரு மாநிலத் தலைவரையும் வதந்தி அணிக்குத் தனியாக ஒரு மாநிலத் தலைவரையும் நியமித்துள்ளோம். இதெல்லாம் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இனி மாதம்தோறும் மூன்று மாவட்டங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வதந்தியைப் பரப்பியவர்க்கு *வதந்தி ராஜா* என்ற பட்டமும் ஒரு இலட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். அதிக அவதூறுகளைப் பரப்பியவர்க்கு அவதூறு மகாராஜா என்ற பட்டமும் ஐந்து இலட்சம் பணமும் பரிசாகத் தரப்படும்.

அதிகமான போலி ஆதாரங்களைத் தயாரித்து பரப்பும் உறுப்பினருக்கு* *போலி ஆதார விற்பன்னர்* என்ற பட்டமும் இருபது இலட்சம் பரிசும் வழங்கப்படும்.

வதந்திகளைப் பரப்புவோம்
கட்சியை வளர்ப்போம்.
அவதூறுகளைப் பரப்புவோம் கட்சியை வளர்ப்போம்

போலி ஆதாரங்களைத் தயாரித்து நம் எதிர் அணிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்வோம்.
@@#@#@@##@@@@#@@@##@#@@@@@@@
🔥 தியசக்தி அரசியல் - தேவையில்லை நாட்டுக்கு🔥

எழுதியவர் : மலர் (27-Nov-23, 11:35 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 63

மேலே