உப்பிட்டவனை உள்ளளவும் நினை

மண்ணில் அவன் சிந்தும் வியர்வையின் உப்பு
மண்ணையே நம்பி வாழும் அவன் அது
மழைநீரில் நனைந்து பூரிக்கையில் சிந்தும்
ஆனந்தக் கண்ணீரின் உப்பு ஆக
இவ்விரண்டு உப்பும் கலந்தே இருக்கும்
விளைநிலம் தரும் உணவு பண்டங்கள்....
உப்பிட்டவன் ஆகின்றான் விவசாயி அதனால்
உப்பிட்டவனை உள்ளளவும் நினைத்தல் வேண்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Nov-23, 3:12 pm)
பார்வை : 39

மேலே